WCT20 2021 - 110 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா அணி - அரை இறுதி வாய்ப்பை இழக்குமா இந்தியா?

Prasu
3 years ago
WCT20  2021 - 110  ஓட்டங்களுக்கு  சுருண்ட இந்தியா அணி - அரை இறுதி வாய்ப்பை இழக்குமா  இந்தியா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்று நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 110 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளதை அடுத்து 111 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்தியா பேட்டிங் செய்ய தொடங்கியது/ இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷான் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டானார்கள்

இதனை அடுத்து வந்த ரோகித் சர்மா, விராத் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகிய நிலையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஓரளவுக்கு நிலைத்து ஆடிய நிலையில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

டிரண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், சோதி 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நிமிடங்களில் 111 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாட உள்ள நிலையில் அந்த அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!