வீடொன்றில் கொள்ளையிட சென்றவரை அடித்தே கொன்ற பிரதேசவாசிகள்!

Reha
4 years ago
வீடொன்றில் கொள்ளையிட சென்றவரை அடித்தே கொன்ற பிரதேசவாசிகள்!

கொழும்பு முல்லேரியா மாளிகாகொடெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட சென்ற மூவரில் ஒருவர் பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்தவர்களை மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட போது, வீட்டினர் உதவிக்குரல் எழுப்பியதையடுத்து, அயலவர்கள் அங்கு ஒன்றுகூடினர். இதனையடுத்து கொள்ளையர்கள் தப்பியோட முயன்ற போது, ஒருவர் பிரதேசவாசிகளிடம் சிக்கினார்.

இதனையடுத்து பிடிபட்ட கொள்ளையனை பிரதேசவாசிகள் நையப்புடைத்ததில் படுகாயமடைந்த நபர் , தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கொள்ளையிட வந்த மற்றைய இரு சந்தேக நபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4