வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை அகற்ற என்ன வழி?

#spiritual
வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை அகற்ற என்ன வழி?

இன்றைய வேகமான காலகட்டத்தில் ஒருவர் தான் முன்னேற வேண்டும் என்பதை விட மற்றவர்கள் தன்னை விட வேகமாக முன்னேறி விடக் கூடாது என்பதிலேயே மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அவ்வாறு ஒருவர் முன்னேற்றத்தை கண்டு பொறாமை படுவதும், அவர்களை கீழே தள்ள பல சூழ்ச்சிகள் செய்வதும் என தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றன.

எனவே நாம் முன்னேறுவதற்கு கடின உழைப்பும் முயற்சியும் இருந்தால் மட்டும் போதாது. மற்றவர்களின் தீய பார்வையில் இருந்து நாம் விடுபட வேண்டும். அவ்வாறு ஒருவரின் மீது இருக்கும் தீய பார்வையினால் உண்டாவதுதான் கண் திருஷ்டி. இதனால் நம்மை சுற்றியும் நமது வீட்டிலும் எதிர்மறை சக்திகள் சூழ ஆரம்பிக்கின்றன. எனவே இவற்றை விரட்டுவதற்காக இந்த தீபத்தை முறையாக ஏற்றி வழிபட வேண்டும்.

பலரின் வீட்டு வாசலிலும் பூசணிக்காய் வைப்பது, கண் திருஷ்டி விநாயகர் படத்தை மாட்டி வைப்பது, தேங்காயை நிலை வாசலில் கட்டி தொங்க விடுவது, அல்லது கற்றாழையைக் கட்டித் தொங்க விடுவது இவ்வாறு கண் திருஷ்டியை அகற்றுவதற்காக பல சூட்சும செயல்களை செய்து வைத்திருப்பார்கள். இதற்குக் காரணம் இந்த கண் திருஷ்டி ஒருவரை பாதித்தது என்றால் அவரின் முன்னேற்றம் சட்டென கீழே சரிந்துவிடும். இவ்வாறு எதிர்மறை சக்திகளுக்கு அவ்வளவு பலம் இருக்கிறது.

ஒரு சிலருக்கு எதிர்மறை சக்திகள் நிறைந்திருப்பதை எவ்வாறு அறிய வேண்டும் என்பததேதெரியாதது. இவ்வாறு எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் தொழில் திடீரென சரிய ஆரம்பிக்கும். நன்றாக இருந்தவர்கள் உடல்நலம் திடீரென சீர்குலைய ஆரம்பிக்கும். மனக் கசப்புகளும், கவலைகளும் அதிகமாக இருக்கும். இவற்றை தவிர்ப்பதற்கு தினமும் நாம் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு உப்பை சேர்த்து குளித்து வந்தால் எதிர்மறை சக்தியின் தாக்கத்தில் இருந்து விடுபட முடியும்.

அதுமட்டுமல்லாமல் இந்த சிறப்பான விளக்கினை வீட்டின் மூலைகளில் ஏற்றி வருவதன் மூலம் நமது உடலில் இருந்தும், வீட்டிலிருந்தும் எதிர்மறை சக்திகள் வெளியேறுவதை நம்மால் உணர முடியும். அதற்காக முதலில் ஒரு மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அகல் விளக்கில் ஊற்றுவதற்காக நல்லெண்ணையை எடுக்க வேண்டும்.
வீட்டில் எத்தனை மூலைகள் இருக்கிறதோ அத்தனை எண்ணிக்கையில் அகல் விளக்கை எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றிலும் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் திரிகளை போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு விளக்கில் டைமண் கற்கண்டை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு கிராம்பினை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு தீபத்தை ஏற்ற வேண்டும்.

டைமண்ட் கற்கண்டு மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாகக் இருக்கிறது. அது போல கிராம்பு நேர் மறை சக்திகளை ஈர்த்து நம்மிடம் கொண்டு வருகிறது. பின்னர் இந்த தீபத்தை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வைத்துவிட வேண்டும். இந்த தீபம் ஏற்றுவதற்கு என்று எவ்வித வரைமுறையும் கிடையாது. எந்த நாளில் வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து செய்துவர நமது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் வெளியேறுவதை சில விஷயங்கள் மூலம் உணர முடியும். வீட்டில் நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு உடல் நலம் தேறி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4