வடக்கில் கடந்த மாதம் 2,612 பேருக்குக் கொரோனா! - 71 பேர் உயிரிழப்பு

Reha
4 years ago
வடக்கில் கடந்த மாதம் 2,612 பேருக்குக் கொரோனா! - 71 பேர் உயிரிழப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து 612 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியதுடன் 71 பேர்  உயிரிழந்துள்ளனர். ஒக்டோபரில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் நேற்று 74 பேர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 865 பேரும், வவுனியா மாவட்டத்தில் 703 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 654 பேரும், மன்னார் மாவட்டத்தில் 273 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 117 பேரும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேரும் என 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரை வடக்கு மாகாணத்தில் 833 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4