பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட மதுபான விருந்து! அதிகாரிகளிடம் சிக்கியது எப்படி?

#Arrest
Prathees
4 years ago
பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட மதுபான விருந்து! அதிகாரிகளிடம் சிக்கியது எப்படி?

பேஸ்புக் ஊடாக கந்தானை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹலோவீன் விருந்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதனையடுத்து, கலால் விசேட அதிரடி சோதனைப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றுடன், சட்டவிரோத நடவடிக்கையை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக அங்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றபோது  அந்த இடத்தில் விருந்து நடந்து கொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டுள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபானம் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்த கலால் அதிகாரிகள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

கலால் திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு சிலர் இடையூறு ஏற்படுத்தியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

அப்போது கலால் துறை அதிகாரிகள் வெளிநாட்டு மது பாட்டில்களுடன் 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளிநாட்டு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் இல்லை என்பது தெரியவந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4