வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அறிவிப்பு...

Prabha Praneetha
2 years ago
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அறிவிப்பு...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழையுடன் கூடிய வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் தற்சமயம் வடமேற்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி நகர்கின்றமை இதற்கான காரணம் என்று அவர் கூறினார்.

இதேவேளை,நாட்டின் வளிமண்டலத்தில் நிலவும் தாழமுக்கத்தினால், கடல் பிரதேசங்களில் காற்றுடன் கூடிய மழையை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். காலி, பொத்துவில், திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையிலான கடல் பிரதேசத்தில் காற்றுவீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம். காங்கேசன்துறையில் இருந்து புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

இதனால், இந்தக் கடல் பிரதேசங்களும் கொந்தளிப்பாக இருக்கும். இதுபற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு திணைக்களம், மீனவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை மாவட்டத்தின் வேவல்தலாவ பகுதியில் 240 மி.மீ மழை வீழ்ச்சியும் காலி – ஹினிதும பகுதியில் 143.7 மி.மீ மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!