பணக்கஷ்டம் தீர வீட்டில் இருக்க வேண்டிய சுவாமி படங்கள்...

#spiritual
பணக்கஷ்டம் தீர வீட்டில் இருக்க வேண்டிய சுவாமி படங்கள்...

இந்தப் பிரபஞ்சம் சூழ்ந்து இருப்பது, நான்கு திசைகளிலும், எட்டு திக்கிலும் தான். நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றாலும் அது இந்த பிரபஞ்சத்தின் மூலம் தான் நடக்கின்றது. அதேசமயம் கெடுதல் வருவதாக இருந்தாலும் அதையும் இந்த பிரபஞ்சம் தான் நமக்கு கொடுக்கின்றது. பணம் காசு சொத்து சுகம் இவைகளை அடைய வேண்டும் என்றாலும் அதற்கான ஆசிர்வாதத்தை கொடுப்பதும் இந்த பிரபஞ்சம் தான்.

ஆக இந்த நான்கு திசைகளிலிருந்தும் எட்டுத் திக்கில் இருந்தும் வரக்கூடிய கெடுதலை தடுத்து நிறுத்தி, நமக்கு வரக்கூடிய கஷ்டங்களை சமாளிக்கும் சக்தியை நாம் பெற வேண்டும் என்றால், நம் வீட்டில் நான்கு திசைகளிலும் எந்த சுவாமியின் திருவுருவப் படத்தை மாட்டி வைக்க வேண்டும் என்பதைப் பற்றிய தகவலை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

இப்போது நம்முடைய வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு விஷயம் என்றால் அது பணம். இந்த பணத்தை நமக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் மகாலட்சுமிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதேசமயம் நாம் மன தைரியத்தோடு இருக்க வேண்டும். நாம் எடுக்கக்கூடிய காரியம் தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டும்.

நமக்கு எந்த எந்த ரூபத்தில் இருந்தும் கஷ்டங்கள் வந்து சூழ்ந்து விடக் கூடாது. இதை மையமாக வைத்து சில குறிப்புகள் உங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. முதலாவதாக நம்முடைய பண தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய தெய்வம் என்றால் அது மகாலட்சுமி தான். இந்த மகாலட்சுமியின் திருவுருவப்படம் கட்டாயம் ஒவ்வொரு வீட்டு பூஜை அரையிறுதியிலும் இருக்கும். அந்த மகாலட்சுமியின் திருவுருவ படம் நம்முடைய வீட்டில் எப்படி இருக்கவேண்டும்.

குறிப்பாக லட்சுமியின் பாதங்கள் வெளியே தெரியாமல், மகாலட்சுமி அமர்ந்து கொண்டிருப்பது போல பூஜை அறையில் திருவுருவப்படம் இருப்பது மிக மிக நல்லது. முடிந்தால் மகாலட்சுமி திருவுருவப் படத்திற்கு பக்கத்திலே விஷ்ணு பகவானையும் வைத்து விடுங்கள். மகாலட்சுமி சந்தோஷமாக உங்கள் வீட்டில் வசிப்பாங்க. இது முதல் விஷயம்.

அடுத்தபடியாக உங்கள் வீட்டு கிழக்கு திசையை பார்த்தவாறு ஒரு விநாயகரின் திருவுருவப்படம் கட்டாயமாக இருக்க வேண்டும். அந்த விநாயகர் என்பவர் உங்களுக்கு வாழ்க்கையில் வரக்கூடிய தடைகளை தகர்பவர். விநாயகரை வீட்டில் கிழக்கு திசை நோக்கி வைத்துவிட்டு விநாயகருக்கு பக்கத்திலேயே ஒரு சிறிய மகாலட்சுமியின் திருவுருவப் படத்தையும் வைத்து விடுங்கள். சங்கடங்கள் குறையும் சௌகரியம் பெருகும்.வடக்கு திசை நோக்கி விஷ்ணு பகவானும் மகாலட்சுமியும் சேர்ந்து இருப்பது போல ஒரு படத்தை மாட்டி வைக்க வேண்டும்.

விஷ்ணு பகவானும் மகாலட்சுமியும் வடக்கு திசையைப் பார்த்தவாறு உங்கள் வீட்டில் அமர்ந்து விட்டால் உங்களுக்கு வறுமை இருக்காது. பண கஷ்டம் இருக்காது. பணம் முடக்கம் இருக்காது. வருமானம் வந்துகொண்டே இருக்கும்.

அடுத்தபடியாக தெற்கு திசை. பெரும்பாலும் தெற்கு திசையை பார்த்தவாறு எந்த தெய்வத்தின் திருவுருவப் படத்தையும் வைக்க மாட்டார்கள். ஆனால் தெற்கு திசையை நோக்கியவாறு நாம் ஒரே ஒரு படத்தை மட்டும் மாட்டி வைக்கலாம். அது அஷ்டலட்சுமியின் திருவுருவப்படம். இது தெற்கு திசையை நோக்கி இருந்தால் உங்களுக்கு பெரிய அளவில் துன்பம் தரக்கூடிய எந்த கஷ்டமும் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கும்.

உங்கள் வீட்டை பாதுகாப்பு வட்த்திற்குள் கொண்டுவர உங்கள் வீட்டின் நான்கு திசைகளிலும் மேல் சொன்ன விஷயங்களை வைத்து பாருங்கள். ஃப்ரேம் போட்ட படமாகத்தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. சிறிய அட்டையில் இருக்கும் சுவாமியின் திருவுருவப் படங்களை அந்த திசையில் ஒட்டி வைத்தால் கூட போதும்.

இப்படி நான்கு திசையில் படங்களை பூஜை அறையில் மாட்டி வைத்தாலும் சரி, அல்லது வரவேற்பறையில் மாட்டி வைத்தாலும் சரி, அது உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக அமையும். நிச்சயமாக வீட்டில் நல்ல மாற்றங்கள் நிகழும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4