இருளில் மூழ்குமா இலங்கை? இறுதித் தீர்மானம் நாளை!

Reha
4 years ago
இருளில் மூழ்குமா இலங்கை? இறுதித் தீர்மானம் நாளை!

நாடளாவியரீதியில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்துவது குறித்த இறுதி தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளதாக மின்சார சேவையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாட்டு மக்கள் இருளில் இருக்க நேரிடும் என மின்சார சேவையாளர்கள் சங்கம் அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில் மின்துண்டிப்பை மேற்கொள்ளாது தொழிற்சங்க நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

எனினும் தங்களது தொழிற்சங்கத்தினர் இல்லாவிட்டால் மின்சார விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4