6.7 கோடி ரூபாவுடன் தப்பியோடிய வாகன சாரதி மடக்கிப் பிடிப்பு!

Reha
2 years ago
6.7 கோடி ரூபாவுடன் தப்பியோடிய வாகன சாரதி  மடக்கிப் பிடிப்பு!

ஒரு தனியார் வங்கியின் ஏரிஎம் இயந்திரங்களுக்கு பணத்தை எடுத்துச் சென்ற வாகன சாரதி, பணத்துடன் தப்பியோடிய நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். ரூ.6,74,19,700 பணத்துடன் தப்பிச் சென்ற வாகனம், நுவரெலியா, பதுளை வீதியில் ரந்தபொல சந்திக்கு அருகில் விசேடஅதிரடிப்படையினரால் மடக்கப்பட்டு, சாரதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் முன்னாள் இராணுவ வீரர். கொழும்பில் இருந்து ஹட்டன் வரையுள்ள தனியார் வங்கியொன்றின் கிளைகளில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பப்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றது. பணத்தை ஏற்றி வந்த வாகனம், ஹட்டனிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடுவதற்காக நிறுத்தப்பட்டது.

வங்கியின் இயந்திரத்தில் பணத்தை இட, வங்கி ஊழியர்கள் வாகனத்திலிருந்து இறங்கிச் சென்ற போது, வாகனத்திலிருந்த பணத்துடன் சாரதி தப்பிச் சென்று விட்டார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது நுவரெலியா பதுளை வீதியில் அம்பேவெல ரெண்டபொல சந்தியில் வைத்து அந்த வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் மடக்கிப் பிடித்து, சாரதியை கைது செய்தனர். பணமும் சந்தேக நபரும் கெப்பெட்டிபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!