விமானத்தில் பயணித்த பயணிகளை இடைநடுவில் தவிக்கவிட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

Keerthi
2 years ago
விமானத்தில் பயணித்த பயணிகளை இடைநடுவில் தவிக்கவிட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 42 பயணிகள் இடைநடுவில் தவிக்க விட்டு சென்ற சம்பவம் பதிவாகி உள்ளது.

சென்னையில் இருந்து கொழும்பு வழியாக துபாய் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 42 பயணிகளுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

பி.சீ.ஆர் பரிசோதனை செய்த சான்றிதழ் தங்களிடம் இருந்தும், ரேபிட் அன்டிஜன் சான்றிதழ் இருந்தால் தான் விமானத்தில் அனுமதிப்போம் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான நிறுவனத்தின் செயற்பாடு குறித்து பயணிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ரேபிட் டெஸ்ட் சோதனையை பொறுத்தவரை 6 மணி நேரம் தான் அதற்கு மதிப்பு, நாங்கள் இங்கிருந்து கொழும்பு சென்று அதற்கு பிறகு துபாய் செல்வதற்குள் 6 மணி நேரத்துக்கும் மேலாகிவிடும். இது குறித்து எவ்வளவோ எடுத்துக்கூறியும் எங்களை விமானத்திற்குள் அனுமதிக்கவில்லை என பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

'கட்டட வேலைக்கு செல்வோர் முதல் தொழில் நிமித்தமாக செல்வோர் வரை 42 பேர் இப்போது சென்னை விமானத்தில் இருக்கிறோம். இங்குள்ள எந்த அதிகாரியும் உருப்படியாக பதில் அளிக்கவில்லை. எங்கள் டிக்கெட் கட்டணத்தை முகவர்கள் எப்படியும் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் 42 பேரும் சென்னை விமான நிலையத்தில் இருக்கிறோம்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வளவு மோசமாக நடந்துகொள்ளும் என எனக்குத் தெரியாது, எங்களை துபாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனத்துக்கு தான் உள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!