இன்று  நாடு இருளில் மூழ்குமா? அறிவிப்பு வெளியானது

#Protest #Colombo
Prathees
4 years ago
இன்று  நாடு இருளில் மூழ்குமா? அறிவிப்பு வெளியானது

தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (03) எண்ணெய் துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்துறை ஒன்றிணைந்த தொழிற்சங்கம் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 

இன்று நண்பகல் 12.00 மணியளவில் இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வேலைநிறுத்தம்  இடம்பெறாது என்றும் போராட்டம் காரணமாக மின்சாரம் தடைப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னிலையத்தின் 40% பங்குகளை விற்பது தொடர்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனமான நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி இன்க் உடனான ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்குமே இந்தப் போரட்டம் நடத்தப்படவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4