மீண்டும் இலங்கைக்கடல் எல்லைக்குள் நுழைந்த சீனக் கப்பல்!

Reha
2 years ago
மீண்டும் இலங்கைக்கடல் எல்லைக்குள் நுழைந்த சீனக் கப்பல்!

சில நாட்கள் காணாமற்போயிருந்த சீனாவின் ​உர கப்பல் Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் நேற்று மீண்டும் நுழைந்தது.

மாத்தறை – வெலிகமையில் இருந்து 61 கடல்மைல் தொலைவில் குறித்த கப்பல் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பனாமா கொடியின் கீழ் பயணிக்கும் குறித்த கப்பல் மீண்டும் சர்வதேச கப்பல் போக்குவரத்து தொடர்பிலான தரவுக்கட்டமைப்பில் மீண்டும் Hippo Spirit என்ற பெயரில் பயணிக்கின்றது.

வெலிகமையில் இருந்து 61 கடல்மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கி நகர்ந்தவண்ணமுள்ளதாக சர்வதேச கப்பல்களின் பயணம் தொடர்பிலான தரவுக்கட்டமைப்பின் மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.

பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா அடங்கியுள்ளதாக தேசிய தாவர தடுப்புக் காப்புச்சேவையினால் இரண்டு தடவைகள் உறுதிப்படுத்தப்பட்ட 20 மெட்ரிக் தொன் சேதனப் பசளையை ஏற்றி குறித்த கப்பல் பயணிக்கின்றது

குறித்த கப்பல் சீனாவுக்க திருப்பி விடப்பட்ட போதும் அது சீனாவுக்கு செல்லாமல் ஜப்பான் ஜல சந்தியில் சில நாட்கள் தரித்து நின்றது.

பின்னர் வேறு பெயரில் மீண்டும் இலங்கையை நோக்கி வந்த நிலையில் திடீரென காணாமல் போனது. இந்த நிலையில் மீண்டும் அது தனது பழைய பெயருடன் இலங்கைக்கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!