பூண்டு கார முறுக்கு சுடுவது எப்படி?

#Cooking
பூண்டு கார முறுக்கு சுடுவது எப்படி?

தேவையான பொருட்கள்

  • பூண்டுப் பல் - 15,
  •  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
  • அரிசி மாவு - மூன்றரை கப்,
  • உளுந்தை வறுத்து அரைத்த மாவு - அரை கப்,
  • வறுத்த எள் - 2 டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
  • வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

  1. பூண்டுடன் மிளகாய்த்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, பெருங்காயத்தூள், வெண்ணெய், எள், அரைத்த பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும்.
  3. வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.
  4. சூப்பரான பூண்டு கார முறுக்கு தயார்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!