கேரள கஞ்சாவுடன் சிக்கிய 17 வயது மாணவன்

#Arrest #Mannar
Prathees
4 years ago
கேரள கஞ்சாவுடன் சிக்கிய 17 வயது மாணவன்

கேரள கஞ்சா பொதிகளுடன் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (2) மாலை மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி பகுதியில் குறித்த மாணவனிடம் இருந்து 4 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில்இ உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜீவ பண்டார மற்றும் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி சி.ஐ.மணலகுமார, உப பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்க உப பொலிஸ் பரிசோதகர் வணசிங்க தலைமையிலான குழுவினர் மேற்பட்ட கஞ்சா பொதியை கைப்பற்றியதோடு,குறித்த மாணவனையும் கைது செய்துள்ளனர்.

மேற்படி கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4