WCT20 2021 - ஆப்கானிஸ்தான் அணிக்கு 211 ஓட்ட இமாலய வெற்றியிலக்கு

Prasu
3 years ago
WCT20  2021 - ஆப்கானிஸ்தான் அணிக்கு 211  ஓட்ட இமாலய வெற்றியிலக்கு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது, டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வை செய்தது.

முதல் இரண்டு போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில், எப்படியாவது வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா களம் இறங்கியது.

தொடக்க வீரரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் சராசரியாக ஓவருக்கு 10 என்ற அளவில் வந்து கொண்டிருந்தது.

பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு இந்தியா 53 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 37 பந்தில் அரைசதம் அடித்தார். கே.எல். ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 11.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது.

இந்தியாவின் ஸ்கோர் 14.4 ஓவரில் 140 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 47 பந்தில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரி 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் விளையாடிய கே.எல். ராகுல் 48 பந்தில் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ரன்கள் குவிக்க வேண்டும் என்பதால் 3-வது வீரராக ரிஷாப் பண்டும், 4-வது வீரராக ஹர்திக் பாண்ட்யாவும் களம் இறக்கப்பட்டனர். இந்தியா 17 ஓவர்கள் முடிந்த நிலையில் 160 ரன்கள் எடுத்திருந்தது.

18-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 3 பவுண்டரிகள் அடிக்க 15 ரன்கள் கிடைத்தது. 19-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 2 சிக்ஸ் விளாச 19 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா 19 ஓவர் முடிவில் 194 ரன்கள் அடித்தது.

கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 16 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா 13 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 35 ரன்களும், ரிஷாப் பண்ட் 13 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!