நாடு திரும்பினார் ஜனாதிபதி

#Gotabaya Rajapaksa
Prathees
4 years ago
நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவிற்கு  சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) காலை நாடு திரும்பினார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் COP: 26 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவிற்கு சென்றிருந்தார்.

எமிரேட்ஸ் விமானமான EK-650 இல் இன்று காலை 08.30 மணியளவில் ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஒக்டோபர் 30ம் திகதி அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.

அங்கு வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகளின் மேம்பாடு தொடர்பில், உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4