பிரித்தானியாவில் அதீத வெப்ப அலை காரணமாக நீரில் மூழ்கி ஐவர் மரணம்
#Death
#Lanka4
#heat
#Climate
#England
#L4
Prasu
1 hour ago
பிரித்தானியாவில் அதீத வெப்ப அலை காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் மூன்று பதின்ம வயதினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி நீர்நிலைகளில் நீராடும்போது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் 15, 22, 50, 69 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெப்ப அலையின் தீவிரத்தால் பொதுமக்கள் பலரும் எச்சரிக்கையின்றி ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகளில் இறங்குவதே இந்த அடுத்தடுத்த சோக நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாத நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்குமாறு அவசரக் கால மீட்புக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே