யாழ்.தென்மராட்சியில் 78 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனாவினால் மரணம்!

Reha
4 years ago
யாழ்.தென்மராட்சியில் 78 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனாவினால் மரணம்!

யாழ்.தென்மராட்சியில் 78 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர்.

கடந்த வாரம் தனது வீட்டில் பேத்திக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தியிருந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டிருந்த பலர் சுகாதார பிரிவினால் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4