புத்தளம் ஆரம்பப் பாடசாலையில் 4 மாணவர்களுக்குக் கொரோனா!

Reha
4 years ago
புத்தளம் ஆரம்பப் பாடசாலையில் 4 மாணவர்களுக்குக் கொரோனா!

புத்தளம், ஆனமடுவ பிரதேசத்திலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நான்கு மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனமடுவ பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன இந்தத் தகவலை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்றுக்குள்ளான சிறுவர்களில் இரு சிறுவர்கள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பாடசாலையில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஏனைய மாணவர்களைப் பாடசாலைக்கு வரழைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4