ஐஸ் போதைப் பொருளை கடத்த முயன்ற இருவர் கைது

#Arrest
Prathees
4 years ago
ஐஸ் போதைப் பொருளை கடத்த முயன்ற இருவர் கைது

ஐஸ் போதைப் பொருளை கடத்திச் செல்ல முற்பட்ட 2 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலை மன்னாரில் இருந்து நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணி அளவில் கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவைக்கான பேருந்தில் சுமார் 250 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப் பொருளை கொண்டு செல்ல முற்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் நகரின் பிரதான வீதி பகுதியில் வைத்து குற்றத்தடுப்பு பொலிஸார் குறித்த பேருந்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த இரு சந்தேக நபர்களும் ஐஸ் ரக போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4