தீப ஒளி ஏற்றி, தீபாவளி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

Keerthi
4 years ago
தீப ஒளி ஏற்றி, தீபாவளி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

இந்தியாவில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும், தீப ஒளி ஏற்றப்பட்டு முக்கியமான இடங்கள் ஜொலிக்கின்றன.

உலகின் பல்வேறு நாடுகளில் வசித்து வரும் இந்தியர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்தந்த நாட்டில் வசித்து வரும் இந்தியர்களுக்கு, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்த மதத்தினருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தீபாவளி திருநாள் வாழ்த்தில் ‘‘இருளில் இருந்து, அங்கு அறிவு, ஞானம் மற்றும் உண்மை உள்ளது என்பதையும்,  பிரிவிலிருந்து ஒற்றுமை. விரக்தியிலிருந்து நம்பிக்கை என்பதையும் தீபாவளி ஒளி நமக்கு நினைவூட்டட்டும்.  அமெரிக்காவில் வசித்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்த மதத்தினர் மற்றும் உலகெங்கும் உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4