பிரதமர் தலைமையில் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை(புகைப்படம் உள்ளே)

#Mahinda Rajapaksa
Prasu
4 years ago
பிரதமர் தலைமையில் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை(புகைப்படம் உள்ளே)

நாட்டில் நிலவுகின்ற கொவிட் – 19 தொற்றுப் பரம்பலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்சவின் வாசஸ்தலமாகிய அலரி மாளிகையில், பிரதமர் தலைமையில், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு சிறப்புற நிகழ்ந்தேறியது.

சிறப்புமிகு இந்த நிகழ்வினை, இலங்கைத் திருநாட்டின் பிரதமரின் பாரியார், சிராந்தி ராஜபக்ச அம்மையார் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து, தீபாவளிப் பண்டிகை நிகழ்வினைக் கொண்டாடி மகிழும் வகையில் கௌரவ பிரதமர் மற்றும் அவரது பாரியார் அவர்களால் இந்து சமய அறநெறிப் பாடசாலைச் சிறார்களுக்கு இனிப்புப் பட்சணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், நிகழ்வின் விசேட அம்சமாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சுபீட்சமானதொரு எதிர் காலம் நோக்கிய பயணத்திற்கு, துணை செய்யும் வகையில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற புதிய பாடத்திட்ட நடைமுறைக்கு அமைவாக வெளிடப்பட்ட இந்து சமய அறநெறிக் கல்விப் பாடநூல்கள் மற்றும் செயல் நூல்கள் ஆகியன, இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கௌரவ மகிந்த ராஜபக்சவால் நிகழ்விலே கலந்துகொண்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4