இந்தியாவுடன் அமெரிக்கா கூட்டணி! வோஷிங்டன் செல்லும் சுமந்திரன் தலைமையிலான குழுவினர்!

Reha
2 years ago
இந்தியாவுடன் அமெரிக்கா கூட்டணி! வோஷிங்டன் செல்லும் சுமந்திரன் தலைமையிலான குழுவினர்!

இலங்கை தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு இந்தியாவுடன் சேர்ந்து காய்நகர்த்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து தகவலறிந்த அரசாங்கம் பெரும் இராஜதந்திர சீற்றத்தில் இருப்பதாகவும் தெரியவருகின்றது. 

அதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினரை வோஷிங்டன் டிஸிக்கு அமெரிக்கா அழைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், சுமந்திரன் உள்ளிட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழுவொன்று வெகு விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது. இதன் போது அமெரிக்க இராஜாங்க அமைச்சு தமிழர் தரப்பின் அரசியல் நிலைப்பாட்டை கேட்டறிந்து தெளிவுபடுத்திக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் அரசதலைவர் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran), சட்டத்தரணி கனகேஸ்வரன் (Kanakeswaran) மற்றும் சட்ட நிபுணர் நிர்மலா சந்திரஹாசன் (Nirmala Chandrahasan) ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் (Sampanmthan) நியமித்துள்ளார்.

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆட்சிக்கு வந்ததும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்கள் யோசனைகளை பரிந்துரை செய்வதற்காக 2006ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அனைத்து தரப்பு நிபுணர் குழுவில் சுமந்திரன் தவிர்ந்த மற்றைய இருவரும் இடம்பெற்றிருந்தனர்.

வாஷிங்டன் - புது டெல்லி அரசுகளின் மிக உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானத்திற்கு அமையவே இந்த காய்நகர்த்தல் இடம்பெறுவதாக அறிந்த கொழும்பு அரசு பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை அறிந்த பின்னரே புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடல் என்ற அறிவிப்புகளை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) விடுத்துள்ளார். 

மேலும், கெரவலபிட்டிய மின்நிலைய பங்குகளை பங்காளி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நிறுவனத்திற்கு அவசர அவசரமாக கைமாற்றும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு அமெரிக்காவை தாஜா பண்ணும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டமையின் பின்னணி இதுதான் என தகவல் வெளிவந்துள்ளது.

வோஷிங்டன் சந்திப்பு முதலில் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் சில காரணங்களால் இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி, அடுத்த வாரம் சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!