கணவரின் செல்வம் பெருக மனைவி குங்குமத்துடன் எதைக் கொடுக்க வேண்டும்?

#spiritual
கணவரின் செல்வம் பெருக மனைவி குங்குமத்துடன் எதைக் கொடுக்க வேண்டும்?

கணவரின் முன்னேற்றத்திற்கு முழு முதல் காரணமாக இருப்பது மனைவிதான். மனைவி முழுமனதோடு தன் கணவருக்காக வைக்கக்கூடிய உண்மையான வேண்டுதலுக்கு அதீத சக்தி உண்டு. கணவர் முன்னேற வேண்டுமென்று கணவருடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனைவி இந்த ஒரு பொருளை மட்டும் மனதார கணவனின் கையில் கொடுத்தால் போதும். கணவருக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக தீர்வு கிடைத்துவிடும்.

குறிப்பாக கணவரின் பொருளாதாரம் பிரச்சனைகள் சீக்கிரமே தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. மனைவியின் கையால் கணவருக்கு கொடுக்க வேண்டிய அந்த ஒரு முக்கியமான பொருள் என்ன. அந்த பொருளை எப்படி கொடுப்பது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
முதலில் அந்த இரண்டு பொருட்கள் என்ன என்பதை பார்த்துவிடுவோம். சக்தி வாய்ந்த அம்மன் கோவிலில் இருந்து பெறப்பட்ட குங்குமம் ஒன்று. பேரம் பேசாமல் கடையிலிருந்து வாங்கிய வசம்பு அல்லது வசம்புத் தூள்.

எதுவாக இருந்தாலும் சரிதான். இந்த இரண்டு பொருட்களையும் வாங்கிக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதோடு சேர்த்து சிறிய அளவில் ஒரு தாயத்தும் புதியதாக வாங்கிக் கொள்ள வேண்டும்.

கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட குங்குமத்தை சிறிதளவு அந்த காயத்தின் உள்ளே போட்டுக் கொள்ளுங்கள். ஒரு சிறிய வசம்புத் துண்டை உடைத்து தாயத்தின் உள்ளே போட முடிந்தால் போடலாம். அல்லது வசம்புப் பொடியையும் அதில் போட்டு தாயத்தை மூடி, சிகப்பு கயிறில் தாயத்தை கோர்த்து உங்களுடைய கணவரின் கழுத்திலும் கட்டிவிடலாம்.

கையிலும் கட்டி விடலாம். அல்லது தாயத்தை அப்படியே, அவர் பயன்படுத்தும் பர்ஸ்ஸிலும் வைக்கலாம். அது நம்முடைய விருப்பம்தான். மனைவியின் கையால் தான் கணவருக்கு இதை அணிவிக்க வேண்டும். மனைவியின் கையால் தான் கணவரின் பர்ஸில் இதை வைக்கவேண்டும். தவிர அவருடைய கையில் நீங்கள் இதைக் கொடுக்கக்கூடாது. பலன் கிடைக்காது.

கணவனின் கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டே இந்த தாயத்தை தயார் செய்யுங்கள். பூஜை அறையில் வைத்து சக்தி தேவியையும் குல தெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து, அதன் பின்பு இந்த தாயத்தை கொண்டு வந்து உங்கள் கணவருக்கு கட்டி விடுங்கள்.

ஆனால் மாதம் ஒரு முறை இந்த தாயகத்திற்கு உள்ளே இருக்கும் குங்குமத்தையும் வசய்பையும் மாற்றவேண்டும். ஒரே ஒரு தாயத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். மாதம் முறை உள்ளே இருக்கும் பொருட்களை மட்டும் மாற்றி விடுங்கள். கணவருக்கு தீராத துன்பம் நல்ல வேலை கிடைக்கவில்லை. பொருளாதாரத்தில் பெரிய பிரச்சனை, கடன் சுமை, வருமானமே இல்லை இப்படி எந்த பிரச்சனை இருந்தாலும் அதற்கான தீர்வை கூடிய விரைவிலேயே அந்த அம்பாள் உங்களுக்கு காட்டிக் கொடுப்பால்.

மனதார மனைவி, தன் கணவன் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தாலே போதும். அந்த குடும்பம் சீரும் சிறப்பும் செழிப்போடும் வளர்ந்து நிற்கும். மனைவியின் மனது கஷ்டப்படும் படி கணவர் ஒருபோதும் நடந்து கொள்ளக் கூடாது. கணவரது மனது கஷ்டப்படும் என்று நினைத்து மனைவி அனுசரித்து சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். அனுசரித்து செல்வதோடு சேர்த்து, மேல் சொன்ன பரிகாரத்தையும் செய்யும் பட்சத்தில் நிச்சயமாக அந்த வீட்டில் கஷ்டங்கள் காலடி எடுத்து வைக்கவே நடுநடுங்கும். நிச்சயமாக வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடலாம். முயற்சி செய்து பாருங்கள்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4