சிறுவர் இல்லத்தில் கோவிட் அபாயம்: 51 பேர் அடையாளம் காணப்பட்டனர்

#Covid 19 #children
Prathees
4 years ago
சிறுவர் இல்லத்தில் கோவிட் அபாயம்: 51 பேர் அடையாளம் காணப்பட்டனர்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் சிறுவர் இல்லத்தில் இன்று (05) 11 குழந்தைகள் உட்பட  51 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.

பெண் ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து மற்றவர்களுக்கு ஆன்டிஜென் சோதனைகள் நடத்தப்பட்டது.இதன் போது ஏனைய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பண்டாரவளையில் உள்ள சுஜாதா செவன சிறுவர் இல்லத்திலே கோவிட் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி இன்று ஆன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொண்டார்.
அங்கு 11 சிறுகுழந்தைகள் உட்பட, 6 பணிப்பெண்கள்இ ஆசிரியர்கள்இ

உணவகத்தில் இருந்த இருவர் மற்றும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 குழந்தைகளும் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4