உலகின் மிகவும் ஆபத்தான பூக்கள் மற்றும் செடிகள்

Keerthi
4 years ago
உலகின் மிகவும் ஆபத்தான பூக்கள் மற்றும் செடிகள்

இந்த உலகில் உள்ள பல வகையான அழகான பூக்கள் மற்றும் தாவரங்கள் பலரையும் ஈர்க்கின்றன.. ஆனால் தொட்டவுடனேயே நம்மை நொடிப்பொழுதில் கொன்றுவிடக்கூடிய பூக்கள், செடிகள் ஏராளம்.

எனவே இது போன்ற விஷ செடிகள் மற்றும் பூக்கள் பற்றி பார்க்கலாம்..

அகோனிட்டம் செடி :இந்த தாவரத்தின் வேர் மற்றும் இலைகள் இரண்டிலும் விஷம் உள்ளது, ஆனால் வேர் அதிக விஷம் கொண்டது. உலகிலேயே மிகவும் ஆபத்தான தாவரமாக அகோனிட்டம் கருதப்படுகிறது. இந்த விஷம் மூளையை பாதிக்கிறது. இதன் பூக்கள், இலைகள் அல்லது வேர்களில் உள்ள விஷம் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு ஆபத்தானது..

ஹாக்வீட் மலர் : விஷ மலர்களில் ஹாக்வீட் பூவும் சேர்க்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மல்லிகைப் பூ போல இருக்கும் இந்த பூவை தொட்டால், தோலில் கொப்புளங்கள் மற்றும் எரிச்சல் ஏற்படும்.. இது தோல் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே இந்த பூவை தொடுபவர்களின் உயிருக்கே ஆபத்து என்று கூறப்படுகிறது..

மஞ்சினீல் செடி : ஹிப்போமேன் மான்சினிலா என்று அழைக்கப்படும் இந்த செடி புளோரிடா மற்றும் கரீபியன் தீவுகளில் காணப்படுகிறது. இதன் விஷம் ஒரு நபரை பார்வையற்றவராக மாற்றும் அளவுக்கு ஆபத்தானது.. மேலும் இது சுவாச நோய்களையும் ஏற்படுத்தும். எனவே இந்த செடி ஆபத்தானதாக கருதப்படுகிறது..

ரிசினஸ் கம்யூனிஸ் : இது ரிசின் என்றும், அதன் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆமணக்கு எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. அச்சுறுத்தும் தாவரங்களில் ரிசினஸ் கம்யூனிஸ் செடியும் அடங்கும். இந்த செடியை தொட்டாலோ அதை முகர்ந்து பார்த்தாலோ வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோய்கள் ஏற்படுகின்றன. இது வளர்சிதை மாற்றத்தின் செல்களை அழிக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்பை ஒரு வாரத்திற்குள் சரியாகச் செய்யாவிட்டால், உயிரையும் இழக்க நேரிடும்.

அப்ரின் செடி : இந்த தாவரத்தில் உள்ள பழங்களின் விதைகள் மிகவும் ஆபத்தானவை. எனவே இந்த செடியும் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இது சிவப்பு நிற பெர்ரி போல தோற்றமளிக்கிறது.. யாராவது தவறுதலாக அதை சாப்பிட்டால், அவர் மரணத்தை சந்திக்க நேரிடும்..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4