டெங்கு எச்சரிக்கை: ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

Prathees
2 years ago
டெங்கு எச்சரிக்கை: ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 13ஆம் திகதி வரை விசேட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

2021ஆம் ஆண்டில் இதுவரை 22,902 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 2,979 பேர் ஒக்டோபர் மாதத்தில் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன், இம்மாதத்தின் கடந்த 4 நாட்களில் 505 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, அடுத்த சில வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, டெங்கு ஒழிப்புக் குழுவினர் வீடுகளுக்குச் சென்று இந்த நடவடிக்கைகளை வெற்றியடையச் செய்வதற்கு பொதுமக்கள் உதவுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கேட்டுக்கொள்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!