நீங்கள் ஓய்வூதியம் பெறுபவரா? இதோ முக்கிய தகவல்

Prathees
4 years ago
நீங்கள் ஓய்வூதியம் பெறுபவரா? இதோ முக்கிய தகவல்

2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் கீழ் சலுகைகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் பலன்கள் 2016 ஜனவரி 1ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெறும் அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுவதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

70 வயதுக்கு குறைந்த ஓய்வூதியர்களுக்கு மாதாந்தம் ரூ.400 மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.600 மாதாந்தம்  அறவிட்டு குறித்த  திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பொது மற்றும் மாகாண பொது சேவை ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும் இந்த காப்பீட்டு திட்டத்தின் பலன்கள்இ வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்குக் கிடைக்கும் மற்றும் அவர்களின் மனைவிஇ மற்ற குழந்தைகள் அல்லது ஊனமுற்ற குழந்தைகளுக்குக் கிடைக்காது.

இந்தக் காப்புறுதித் திட்டத்திற்குத் தகுதியுடைய அனைத்து ஓய்வூதியர்களும் பங்களிப்பாளர்களாக மாறுவதற்கு இணங்காதவர்கள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியத் திணைக்களத்திற்கோ அல்லது பிரதேச செயலக ஓய்வூதியப் பிரிவினருக்கோ அறிவிக்குமாறு ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4