இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பை நடத்திய பெண் கைது

#Arrest #Police
Prathees
4 years ago
இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பை நடத்திய பெண் கைது

துபாயில் மறைந்திருந்திருக்கும் மலேவெல இந்திக்க அல்லது இந்திக்க மகேஷ் ரணவீர என்பவரின்  
இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தியதற்காக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் எல்பிட்டிய - உரகஹா கிரிமெட்டியாவ பகுதியைச் சேர்ந்த உரகஹ சுட்டி பேபி எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் எமோ தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த மோசடியை மேற்கொண்டுள்ளார்.

சந்தேக நபர் தீவில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளை பயன்படுத்தி இந்த மோசடியை மேற்கொண்டு வந்துள்ளார்.

இவர் சில நாட்களுக்கு முன்னர் அளுத்கமவில் உள்ள விடுதி ஒன்றில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் போது குறித்த பெண் 12 கிராம் 650 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் கடந்த காலங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் என்பதுடன் அவருக்கு எதிராக எல்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று (06) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4