மண்ணித்தலை சிவன்கோவிலை பாதுகாக்கும் பணிகள் ஆரம்பம்!

#SriLanka #Jaffna
மண்ணித்தலை சிவன்கோவிலை பாதுகாக்கும் பணிகள் ஆரம்பம்!

3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சோழர்காலத்தைச் சேர்ந்த, பூநகரி மண்ணித்தலை சிவன் கோவிலை பாதுகாப்பதற்குரிய பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்க அந்தப் பணியை ஆரம்பித்துவைத்தார்.

இந்தநிகழ்வில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ. அங்கஜன், தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. நிஷாந்தி ஜெயசிங்க, இலங்கை தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மானதுங்க, கிளிநொச்சி மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மற்றும் தொல்லியல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4