இலங்கையில் வீதி விபத்துகளை குறைக்க இவ்வளவு டொலர்கள் தேவையா?

#Accident
Prathees
2 years ago
இலங்கையில் வீதி விபத்துகளை குறைக்க இவ்வளவு டொலர்கள் தேவையா?

நாட்டில் வீதி விபத்துக்களை பாதியாகக் குறைக்க அடுத்த 10 வருடங்களில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

பலதரப்பு கடன் வழங்குபவர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை ஒரு முக்கிய தடையாக அடையாளம் கண்டுள்ளது.

உலக வங்கியின் அறிக்கையின்படி, இலங்கையில் வருடாந்தம் சுமார் 38,000 வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

அவற்றில் 3,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவதுடன் 8,000க்கும் மேற்பட்டோர் காயமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.

சனத்தொகை அடிப்படையில் தெற்காசியாவிலேயே அதிகளவானோர் வீதி விபத்துக்களால் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியில் இலங்கை முன்னிலை வகிப்பதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையானது அபிவிருத்தியடைந்த நாடுகளை காட்டிலும் சுமார் 5 மடங்கு அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வீதி விபத்து மரணங்கள் மற்றும் காயங்கள் இலங்கை போன்ற நாடுகளுக்கு வருடாந்தம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-5 வீதத்திற்கு இடையில் செலவாகும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

செயலற்ற செலவு மிகவும் அதிகமாக உள்ளது. எனவே, வீதிப் பாதுகாப்பிற்கான முதலீடுகள் பயனுள்ளதாக இருக்க இலங்கை அரசாங்கத்திடம் இருந்து நீண்டகால அர்ப்பணிப்புக்கு உலக வங்கி அழைப்பு விடுக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!