இருளில் மூழ்குமா நாடு? மின்சார தொழிற்சங்கம் விடுத்த அறிவிப்பு

Reha
2 years ago
இருளில் மூழ்குமா நாடு? மின்சார தொழிற்சங்கம் விடுத்த அறிவிப்பு

தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக, பல்வேறு தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து, எதிர்வரும் தினங்களில் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள், துறைமுகம் மற்றும் மின்சார ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவிக்கின்றது.

இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால், இதனைக் குறிப்பிட்டார்.

மின்சாரம், துறைமுகம், எரிபொருள், தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் விநியோகம் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பங்குப்பற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பணிப் பகிஷ்கரிப்பில் மின்சார ஊழியர்கள் ஈடுபடும் பட்சத்தில், நாட்டின் மின்சார விநியோகம் தடைப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை, பொதுமக்கள் மத்தியில் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், குறித்த தொழிற்சங்கம் தொடர் பணிப் பகிஷ்கரிப்பை நோக்கி செல்ல தயாராகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!