உயர் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்!

Reha
4 years ago
உயர் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள உயர் வகுப்பு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி 10, 11, 12 மற்றும் 13ஆம் தரங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பரிந்துரை கிடைத்தவுடன், பாடசாலைகளில் கல்விப் பணிகளைத் ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்து, ஆரம்பப் பிரிவின் கல்வி நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

எனினும் தரம் 6 முதல் தரம் 9 வரையான பாடசாலை களில் கல்வி நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை எனவும், எதிர்காலத்தில் அந்தத் தரங்களில் கற்கைகளை ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை விடுபட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கி பரீட்சைகளை நடத்த ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4