கொவிட் தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறதா?

#Covid Vaccine
Prasu
2 years ago
கொவிட் தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறதா?

உலகம் முழுவதும் ​கொவிட் நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கொவிட் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த அமெரிக்க ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி உலகப் புகழ்பெற்ற பத்திரிகையான ´சைன்ஸ்´ விசேட வௌிப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.

ஃபைசர், மொடர்னா மற்றும் ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி சோதனையில் கிட்டத்தட்ட 800,000 அமெரிக்கர்கள் பங்கேற்றுள்ளனர்.

பெப்ரவரி முதல் ஒக்டோபர் வரையிலான ஆறு மாதங்களில் கொவிட் தடுப்பூசியைப் பெற்ற மக்களின் உடலினுள் வைரஸுக்கு எதிரான பாதுகாப்பு தொடர்பில் இதன்போது கவனம செலுத்தப்பட்டது.

அதன்படி, மார்ச் மாத தொடக்கத்தில் 86.9% ஆக இருந்த ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் ஆறு மாதங்களுக்குப் பிறகு 43% ஆகக் குறைந்துள்ளது.

89% ஆக இருந்த மொடர்னா தடுப்பூசியின் செயல்திறன் ஆறு மாதங்களுக்குப் பிறகு 58% ஆகக் குறைந்துள்ளது.

ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி செயல்திறன் 86.4% இல் இருந்து 13% ஆக குறைந்துள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸுக்கு எதிரான மூன்று தடுப்பூசிகளின் செயல்திறன் 89% இலிருந்து 13% ஆகக் குறைந்துள்ளதாக ஆராய்ச்சி அறிக்கையில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!