கிணற்றில் நீந்திய மாணவனுக்கு நேர்ந்த கதி

#Death #Jaffna
Prathees
4 years ago
கிணற்றில் நீந்திய மாணவனுக்கு நேர்ந்த கதி

சுழிபுரம் - திக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில்   நீந்திய மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் வசிக்கும் பிரபாகரன் ரஜீவன் என்ற 18 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன்   நேற்று  தனது நண்பர்களுடன் பாடசாலையில் சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டு சென்று  சுழிபுரம் - திக்கரை பகுதியில் உள்ள கணிணறு ஒன்றில் நீந்தச் சென்றுள்ளார்.

இந்தநிலையில் அவர் நீந்திக் கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் அயலில் உள்ளவர்களை அழைத்து அவரை காப்பாற்றி மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.

மூளாய் வைத்தியசாலையில் இருந்து குறித்த இளைஞனை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்போது அவரது உயிர் பிரிந்தது.

குறித்த மாணவனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4