சூட்கேஸில்  சடலமாக மீட்கப்பட்ட பெண்: கொலைக்கான காரணம்  வெளியானது

#Death #Investigation
Prathees
2 years ago
சூட்கேஸில்  சடலமாக மீட்கப்பட்ட பெண்: கொலைக்கான காரணம்  வெளியானது

சப்புகஸ்கந்த பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருமணமான தம்பதிகள் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் கொல்லப்பட்டதாகவும், அவரது சடலம் சூட்கேஸில் வைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சூதாட்டத்திற்கு அடிமையான பெண்ணிடம் தங்க நகைகள் மற்றும் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

சபுகஸ்கந்த மாபிம வீதியில் குப்பை பையில் இருந்து நேற்று முன்தினம் (05) மொஹமட் சஷி பாத்திமா மும்தாஸ் என்ற 42 வயதுடைய பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 10, ரம்சா பிளேஸில் உள்ள மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் எனவும் சூதாட்டத்திற்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 28ஆம் திகதி மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த தோழி ஒருவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார்.

பாத்திமா முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி மோதர லெல்லமாவுக்கு சென்றதாக பாத்திமாவின் தோழி சித்தி ரோஸானா (36) பொலிஸாரிடம் தெரிவித்தார்.

ஆனால், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​பாத்துமாவின் தோழி கூறியது முரண்பாடாக இருப்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

முரண்பட்ட வாக்குமூலங்களை வழங்கியதற்காக ரோஸானா மற்றும் அவரது கணவர் ஆனந்த பாபு ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியரிடம் நடத்திய விசாரணையில், பாத்திமாவை அவரது சகோதரருடன் சேர்ந்து சமிட்டிபுர பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று, கட்டையால் அடித்துக் கொன்றது தெரியவந்தது.

பின்னர் தம்பதியினர் சடலத்தை சூட்கேஸில் அடைத்து கடந்த 29ஆம் திகதி லொறியில் எடுத்துச் சென்று சபுகஸ்கந்த மபிம வீதியிலுள்ள குப்பை மேட்டில் வீசிச் சென்றுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய மற்றைய நபர் பாத்திமாவின் தங்க நகைகள் மற்றும் பணத்துடன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளைஇ சடலத்தை ஏற்றிச் சென்ற லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டியைக் கண்டுபிடிக்கும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!