'மொட்டு'வின் தேவைக்கேற்ப இருக்கத் தயாரில்லை! - மைத்திரி பதிலடி

Reha
4 years ago
'மொட்டு'வின் தேவைக்கேற்ப இருக்கத் தயாரில்லை! - மைத்திரி பதிலடி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேவைக்கேற்ப நாம் இருக்கத் தயாரில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘தாம் கூறும்படி இருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனரே. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?' என்று குறித்த ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு எவரேனும் கூறும் விதத்தில் இருக்கத் தயாராக இல்லை என்று மைத்திரிபால பதிலளித்துள்ளார்.

"நாம் சாதாரணமாக தாய், தந்தை கூறும்போது, அவற்றைக் கேட்டுக்கொண்டு இருந்துள்ளோம். அவர்கள் எமது சித்தப்பர்களா?" எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிடம் மைத்திரிபால கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4