மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் பரிதாப மரணம்!

Reha
4 years ago
மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் பரிதாப மரணம்!

ரவுட்டருக்கு மின்னிணைப்பை ஏற்படுத்த முயன்ற பாடசாலை மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்

பதுளை, லுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலகொல்ல பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என லுனுகல பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். அலகொலகல, லுனுகல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன், லுனுகல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக சடலம் லுனுகலை வைத்தியசாiயின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் லுனுகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4