யாழில் ஹயஸ் வாகனத்தில் இளம் பெண் கடத்தல்!

Reha
4 years ago
யாழில் ஹயஸ் வாகனத்தில் இளம் பெண் கடத்தல்!

ஹயஸ் வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை மருத்துவமனையில் பணிபுரியும் இளம் பெண் தனது சகோதரனது மோட்டார் சைக்கிளில் நேற்று மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சகோதரன் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்திவிட்டு இளம் பெண்ணைக் கடத்திச் சென்றனர் என்று முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4