WCT20 2021 - இந்தியாவின் அரையிறுதி கனவை களைத்த நியூஸிலாந்து

Prasu
3 years ago
WCT20 2021  - இந்தியாவின் அரையிறுதி கனவை களைத்த நியூஸிலாந்து

டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. அபு தாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. துவக்க வீரர்கள் மார்ட்டின் குப்தில் 28 ரன்களும், டேரில் மிட்செல் 17 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் (40 ரன்- நாட் அவுட்) கீப்பர் தேவன் கான்வாய் (36 ரன் -நாட் அவுட்) ஆகியோர் கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்து வைத்தனர். 11 பந்துகள் மீதமிருந்த நிலையில், நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. இதனால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கும் முன்னேறியது.

இந்த போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தால் இந்தியா ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் நியூசிலாந்து வெற்றி பெற்றதால் இந்தியாவின் அரையிறுதி கனவு தகர்ந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!