வீடொன்றுக்கு அரைமூடி தேங்காய் மட்டுமே - சாரங்க அலஹபெரும அறிவிப்பு

Prasu
2 years ago
வீடொன்றுக்கு அரைமூடி தேங்காய் மட்டுமே - சாரங்க அலஹபெரும அறிவிப்பு

தென்னம் ஆராய்ச்சி சபையின் தலைவர் சாரங்க அலஹபெருமவினால் வெளியிட்ட கருத்து நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒவ்வொரு வீட்டிலும் நாள் ஒன்றுக்கு அரைமூடி தேய்காயை பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சரியான முறையில் பயன்படுத்தினால் அது சாத்தியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வீடுகளில் தேங்காய் பயன்பாடு நூற்றுக்கு 30 வீதமான அளவு விரயமாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வருடாந்த தேங்காய் அறுவடையில் 70 வீதம் உள்நாட்டு பாவனைக்காகவே பயன்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கையால் தேங்காய் பால் பிளித்தால் 20-30 சதவீதம் தேங்காய்ப்பால் கிடைத்தாலும், உரலில் இடித்து அல்லது அம்மியில் அரைத்து பால் எடுத்தால் 50 சதவீத தேங்காப்பால் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!