ஒட்டுமொத்த அரசையும் வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்! - மனோ இடித்துரைப்பு

Prasu
4 years ago
ஒட்டுமொத்த அரசையும் வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்! - மனோ இடித்துரைப்பு

"விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசையும் கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்."

- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் இன்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்குக் கடன் கொடுத்தன. அந்த நாடுகள் பொருளாதாரத்தை முகாமை செய்யவில்லையா? அப்படியானால் எமது நாட்டு அரசுக்கு மட்டும் ஏன் தடுமாற்றம்?

தேசிய உற்பத்தியில் புரட்சி செய்யப்போவதாக அறிவித்துவிட்டு மஞ்சளுக்குத் தடை விதிக்கப்பட்டது. நாட்டில் தற்போது மஞ்சள் இருக்கின்றதா? பயறு, உளுந்து உள்ளிட்ட பொருட்களும் இல்லை. இந்த விடயத்தில் அரசு தோல்வி கண்டுள்ளது" - என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4