நாணய அச்சிடலை நிறுத்தியது மத்திய வங்கி:- பசிலிடம் முக்கிய கோாிக்கை!

Prabha Praneetha
2 years ago
நாணய அச்சிடலை நிறுத்தியது மத்திய வங்கி:- பசிலிடம்  முக்கிய கோாிக்கை!

இலங்கையில் பொருளாதார நிலையை சீரமைப்பதற்காக சா்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துமாறு சுமாா் 20 முன்னணி, வா்த்தகா்கள், நிதியமைச்சா் பசில் ராஜபக்சவிடம் கோாிக்கை விடுத்துள்ளனா்.

இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை அவா்கள் பசில் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளனா்.

எனினும் அதற்கு இன்னும் பதில் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் குறித்து சா்வதேச தரமதிப்பீடுகள் குறைத்துக்காட்டப்படுகின்றமை மற்றும் வெளிநாட்டு கடன் திருப்பிச்செலுத்தப்படாமை தொடா்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே சா்வதேச நாணய நிதியத்துடன் பேசி பிரச்சனைக்குத் தீா்வைக்காணுமாறு குறித்த வா்த்தகா்கள் கோாியுள்ளனா்.

கடந்த 20மாதங்களில் இலங்கை மத்திய வங்கி, 2.9 ரில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளது.

இது ஜனாதிபதி கோட்டாபய பதவியேற்றதன் பின்னா் நாணய அச்சிடலில் ஏற்பட்ட 37 சதவீத அதிகாிப்பாகும்.

இந்தநிலையில் பொருளாதாரத்தை இயல்புக்கு கொண்டு வர இன்னும் 12 மாதம் முதல் 18 மாதங்கள் வரை செல்லும் என்றும் வா்த்தா்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனா்.

இதேவேளை கடந்த இரண்டு வாரக்காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கி, நாணயங்களை அச்சிடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!