கடற்றொழிலாளர்களுக்கான விஷேட அறிவித்தல்

Prasu
4 years ago
 கடற்றொழிலாளர்களுக்கான விஷேட அறிவித்தல்

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கமொன்று உருவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் இந்த தாழமுக்கம் வலுவடைந்து, இலங்கையின் வடக்கு கரையோரத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதிகளில் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் இடைக்கிடை காற்று வீசுவதுடன், சில சந்தர்ப்பங்களில் கடும் மழையுடனான வானிலையும் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (08) பிற்பகல் முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4