ஹெட்போனால் நடந்த விபரீதம்! 20 வயது இளைஞன் பலி

#Death #Trincomalee
Prathees
4 years ago
ஹெட்போனால் நடந்த விபரீதம்! 20 வயது இளைஞன் பலி

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் நேற்று (07) மாலை உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளிப்பொத்தானை 95ஆம் கட்டை சதாம் நகரை சேர்ந்தஇ ஹமீத் முபீத் (20வயது) என்ற இளைஞ
னே இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்தவர் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன்  ஹெட்போன் அணிந்தவாறு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததாகவும்இ சக நண்பர்கள் புகையிரதம் வருவதை அவதானித்து கூச்சலிட்டதாகவும் ஹெட்போன் அணிந்திருந்தமையினால் அவருக்கு சரியாக கேட்காத நிலையில் இருவரும் அவரை நோக்கி ஓடிய போதும் ரயில் வேகமாக அவரை மோதியதாகவும் சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளானவரின் தலை துண்டிக்கபட்ட நிலையில் சடலம் கந்தளாய் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4