கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் பரிதாபச் சாவு!

#Death #Police
Prathees
4 years ago
கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் பரிதாபச் சாவு!

ஹொரவப்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கவெவ பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ரம்பாவ என்ற இடத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த குறித்த குடும்பஸ்தர் அங்கு காவலுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையிலேயே, கட்டுத்துவக்கு வெடித்தது எனத் தெரியவருகின்றது.

தற்போது இவரது சடலம் ஹொரவப்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹொரவப்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4