சீன உரம் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: இலங்கை

#China
Prathees
2 years ago
சீன உரம் தொடர்பான  நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: இலங்கை

சர்ச்சைக்குரிய கரிம உரத்தை விநியோகித்த சீன நிறுவனம், இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் மேலதிக பணிப்பாளரிடம் இருந்து 8 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

உர மாதிரிகள் குறித்த ஆய்வு அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும், இதனால் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், உர மாதிரிகளை பரிசோதித்த உள்ளூர் அதிகாரிகள் ஆராய்ச்சியில் தங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தனர்.

சீனாவின் Qindao Sewin Biotech நிறுவனம் இலங்கைக்கு சர்ச்சைக்குரிய கரிம உரத்தை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

இந்த நாட்டிற்கு உரம் இறக்குமதி செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனையின் போது

அதில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருப்பது கண்டறியப்பட்டதுடன், இறக்குமதி செய்யப்பட வேண்டிய உரம் கையிருப்பு நிராகரிக்கப்பட்டது.

இத்தகைய பின்னணியில் அந்த நிறுவனம் 08 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கோரியுள்ளது.

விஞ்ஞான சோதனை முறைகளை மீறி சோதனை அறிக்கைகளை வழங்கியதாகவும், சோதனை முடிவுகளை தவறாக சித்தரிப்பதாகவும்  குறித்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

நவம்பர் 5ஆம் திகதி அனுப்பப்பட்ட மனுவில் மூன்று நாட்களுக்குள் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் மேலதிக பணிப்பாளர் துஷார விக்கிரமாராச்சியிடம் இது தொடர்பில் தெரிவிக்கையில், ​​தமக்கு இன்னும் அழைப்பாணை கிடைக்கப்பெறவில்லை எனவும் விசாரணை அறிக்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!