எயார்பஸ் இழப்பீட்டுத் தொகையில் மோசடி செய்தவர்களை வெளிப்படுத்திய பொன்சேகா

#Sarath Fonseka
Prathees
2 years ago
எயார்பஸ் இழப்பீட்டுத் தொகையில் மோசடி செய்தவர்களை வெளிப்படுத்திய பொன்சேகா

எயார்பஸ்  ஒப்பந்தத்தை ரத்து செய்து அதற்கான நஷ்டஈடு வழங்குவதில் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

மீரிகம, முத்தரகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் (07) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எங்களுடைய நல்லாட்சி அரசாங்கம் வந்து தண்டனை கொடுப்பதாக கூறி என்ன செய்தது? அவர்கள் செய்ததைப்போல கொள்ளையடித்தது.

அந்த அரசு ஆட்சியில் இருந்தபோது எயார்பஸ் ஒப்பந்தம் பற்றி கேள்வி பட்டோம்.

அதில் 20 மில்லியன் டொலர் லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு எங்கள் அரசு வந்து அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

பெரும் இழப்பீடு கொடுத்த பிறகு ஒழிக்கப்பட்டது. இழப்பீடாக சுமார் 150 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாக நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!