கிளிநொச்சியில் கோர மோட்டார் சைக்கிள் விபத்து! இருவர் பலி!!

#SriLanka #Kilinochchi
கிளிநொச்சியில் கோர மோட்டார் சைக்கிள் விபத்து! இருவர் பலி!!

கிளிநொச்சி ஏ - 9 வீதி பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
பரந்தன் பகுதியில் உள்ள கட்டட உற்பத்தி நிலையத்திற்கு சீமெந்து இறக்கிய பின்னர்  பாரவூர்தி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவேளை, அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பாரவூர்தியின் பின் பக்கத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ம. யூட்பவிஷன் வயது 29 குமரபுரம் பரந்தன் என்ற இளைஞனும் ச.காந்தீபன் வயது 34 இல 61 கண்டி வீதி பரந்தனை சேர்ந்த இருவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4