மூன்று  சிறுமிகள் காணாமல் போனமை குறித்து பொலிசார் விசாரணை

#Colombo #Investigation #Police
Prathees
4 years ago
மூன்று  சிறுமிகள் காணாமல் போனமை குறித்து பொலிசார் விசாரணை

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூன்று பெண் சிறுமிகள் வீட்டில் இருந்து மாயமாகியுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

13 வயதிற்கும் 15 வயதிற்கும் உட்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் மற்றும் உறவுக்கார சகோதரி ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் வீட்டில் இருந்து காணாமல் போனதாக நேற்று (08) முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் சிறுவர்களின் பெற்றோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4